search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன வருத்தம்"

    • தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை, அக். 13-

    குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான பளுகலை அடுத்த குட்டைக் கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரு கிறது.

    இங்கு கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். இவரது தாயார் வெளி நாட்டில் நர்சு வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி யின் படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொடுக்க வேண்டி அதற்கான ஏற்பாடு களை தாயார் செய்து வந்து உள்ளார். ஆனால் மாணவி கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

    இதனை கண்டித்த தாயார், மகள் காதலிப்பதாக தெரிய வந்த வாலிபரிடமும் செல்போனில் பேசி, தனது மகளை விட்டு செல்லுமாறு திட்டி உள்ளார்.

    இதுபற்றி அந்த வாலி பர், மாணவியிடம் கூறி உள்ளார். மேலும் அவரது தாயார் பேசியதை செல்போ னில் பதிவு செய்து அதனை மாணவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் மாணவி மன வருத்தம் அடைந்தார்.

    நேற்று இரவு மாணவி தான் தங்கி இருந்த விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அதில் தோல்வி கண்டு கீழே விழுந்ததில் அவரது 2 கால்களும் உடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார்.

    தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி தூக்குப் போடவில்லை என்பதும், கல்லூரியின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதில் தான் மாணவியின் 2 கால்களும் உடைந்த நிலையில் உயிருக்கு போராடியபடி வலி தாங்க முடியாமல் கதறி அழுது உள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவி கள் மற்றும் விடுதி காப்பா ளர்கள், மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றதாக கூறிய நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதல் விவகாரத்தில் மாணவி கல்லூரி கட்டிடத்தின் மேலி ருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்து உள்ளது.

    தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×